கொடைக்கானல்: உலக சுற்றுலா தினம் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு மாலை அணிவித்து வரவேற்ற அதிகாரிகள், நடனம் ஆடி உற்சாகம்
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் சுற்றுலாத்துறை சார்பாக உலக சுற்றுலா தினவிழா கொண்டாடப்பட்டது.. பேருந்தில் வந்த சுற்றுலா பயணிகளுக்கு கோட்டாட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், உள்ளிட்ட அதிகாரிகள் மாலை அணிவித்து வரவேற்பு மேலும் மேலதாளங்கள் பொய்க்கால் குதிரை, உள்ளிட்ட பாரம்பரிய நடனங்கள் மற்றும் இசை அமைக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமடைந்து பேருந்து நிலையத்தில் நடனமாட துவங்கினர்