தூத்துக்குடியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இதில் பெரும்பாலான இடங்களில் மழை நீர் அகற்றப்பட்டு விட்டன. ஆனால், ஆதிபராசக்தி நகர், ரஹமத் நகர் போன்ற பகுதிகளில் காலி மனைகளில் இன்னும் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. தேங்கியுள்ள மழை நீரில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். உடனடியாக தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.