வாலாஜா: லாலாபேட்டையில் சித்தூர் செல்லும் சாலையில் விழுந்த பெரிய மரத்தால் போக்குவரத்து பாதிப்பு
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டையில் இருந்து சித்தூர் செல்லும் சாலையில் லாலாபேட்டை அருகே பெரிய மரம் ஒன்று சாலையின் குறுக்கே வேருடன் சாய்ந்து விபத்துக்குள்ளானது இதனால் அவ்வழியாக செல்லும் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.இதனால் பணிக்கு செல்வோர் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். விரைந்து வந்து தீயணைப்புத் துறையினர் மற்றும் சிப்காட் போலீசார் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு சாலையில் விழுந்த பெரிய மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்