ஆத்தூர்: செம்பட்டியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடும் போக்குவரத்து பாதிப்பு. 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நிற்பதால், பொதுமக்கள் பயணிகள் அவதி
Attur, Dindigul | Oct 18, 2025 திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி வழியாக, மதுரை பொள்ளாச்சி, பல்லடம், திருப்பூர், கோவை மற்றும் தேனி, கம்பம், குமுளி, மூணாறு, கேரளா அதேபோல திண்டுக்கல், திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சந்திப்பு சாலையாக உள்ளது. செம்பட்டி திண்டுக்கல் சாலை, வத்தலகுண்டு சாலை, மதுரை சாலை மற்றும் பழனி சாலையில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், வெளியூர் செல்லும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் அவதி.