எட்டயபுரம்: எட்டயபுரத்தில் காற்றாடி எஸ்கார்ட் வாகனத்தை திருடி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் மதுரை நெடுஞ்சாலையில் காற்றாடி வாகனத்திற்கு எஸ்கார்டு வாகனமாக வந்த ஸ்கார்பியோ வாகனத்தை தினேஷ், ஆகாஷ், அஜய் ஆகியோர் கடத்திச் சென்ற நிலையில் அவர்கள் கீழஈரால் பகுதியில் எஸ்காடு வாகனமான ஸ்கார்பியோவை விபத்துக்குள்ளாக்கி காவல் துறையினரிடம் சிக்கிக் கொண்டனர் காவல்துறையினர் அவர்களை சிறையில் அடைத்த நிலையில் கொள்ளையர்கள் காரை ஓட்டி சென்று விபத்துக்கு உள்ளாக்கும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.