திண்டுக்கல் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில், தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956-ஆம் நாளினை நினைவு கூரும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடத்தப்பட்ட ஆட்சிமொழிச்சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆட்சிமொழிச்சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணியானது முகாம் அலுவலகத்திலிருந்து தொடங்கி மாநகராட்சி அலுவலகம் வரை நடைபெற்றது.