திருப்பத்தூர் மாவட்டம் கனமந்தூரை சேர்ந்த எலக்ட்ரீசியன் ஸ்ரீநவீன். இவர் தனது காரில் தனது நண்பர்கள் அருள் மற்றும் ஹரீஷ் இருவருடன் தூத்துக்குடி மாவட்டம் குரும்பூரில் உள்ள தனது நிறைமாத கர்ப்பிணி மனைவியை பார்ப்பதற்காக சென்று கொண்டு இருந்தார். கார் கரூர் திண்டுக்கல் சாலையில் வேடசந்தூர் அருகே உள்ள காக்காதோப்பூர் பிரிவில் வந்த பொழுது திண்டுக்கல்லில் இருந்து வேடசந்தூருக்கு வந்த தனியார் பஸ் திடீரென நான்கு வழிச்சாலையில் குறுக்கே புகுந்தது. இதில் தனியார் பஸ்சின் பின்பக்கமாக ஸ்ரீ நவீன் ஓட்டி வந்த கார் மோதியதில் காரின் முன் பகுதி பலத்த சேதம் அடைந்தது.