அரியலூர்: கீழப்பழூவூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லபட்ட ₹89,100 ரூபாய் பறிமுதல்
அரியலூர் மாவட்டம் கீழப்பழூவூரில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று தீவிர சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கத்தை சேர்ந்த நந்தன் என்பவரை நிறுத்தி சோதனை செய்தபோது அவர் உரிய ஆவணங்கள் இன்றி 89 ஆயிரத்தி 100 ரூபாய் பணம் கொண்டு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அப்பணம் பறிமுதல் செய்யபட்டு, கோட்டாச்சியரிடம் ஒப்படைக்கபட்டது.