இது குறித்து வெங்கடேஷ் கொடுத்த புகாரின் பேரில் வேடசந்தூர் டி.எஸ்.பி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது விஜய், அழகர்சாமி, கிருத்திக்ரோஷன், சஞ்சய்குமார், ஜெயசூர்யா, பரமசிவம், அகரமுத்து, மணிகண்டபூபதி, கரண் மற்றும் 17 வயதுடைய கல்லுாரி மாணவர் என தெரியவந்தது. திண்டுக்கல்லில் பதுங்கி இருந்த 10 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.