திருப்பூர் தெற்கு: தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி முதல் ரயில் நிலையம் வரை பேரணி நடைபெற்றது
தந்தை பெரியாரின் 147 வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் திராவிடர் கழகம் சார்பில் கருஞ்சட்டை அணிந்தவாறு மாநகராட்சி அலுவலகம் முதல் ரயில் நிலையம் ஊர்வலமாக சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்