தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புதூர் பகுதிகளில் சின்ன வெங்காயத்தை விவசாயிகள் அதிக அளவு பயிர் செய்தனர் இந்நிலையில் சின்ன வெங்காயத்திற்கு திரிகள் நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் 50% முதல் 100% வரை விளைச்சல் கடுமையாக பாதிக்கும் என விவசாயிகள் வேதனை தெரிவித்து அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.