வேடசந்தூர் அருகே உள்ள கருக்காம்பட்டி மற்றும் விருதலைபட்டியில் செயல்பட்டு வந்த இரண்டு நூற்பாலைகள் பல்வேறு காரணங்களால் ஏற்பட்ட நஷ்டத்தினால் கடந்த 2022 ஆம் ஆண்டு மூடப்பட்டது. பணியாற்றிய தொழிலாளர்களுக்கு போதுமான பண பலன்கள் கொடுத்து செட்டில்மெண்ட் செய்யப்பட்டது. இந்த நிலையில் பூட்டி இருந்த நூற்பாளையை பார்வையிட வந்த நிர்வாக மேலாளர் திருப்பூரை சேர்ந்த சரவணன் என்பவரை நூற்பாலையில் பணியாற்றிய தொழிலாளர்கள் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சரவணன் வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ஆறு பேர் மீது வழக்குப்பதிவு.