வேடசந்தூர்: சுக்காவளியில் பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டும் சாமியார்
வேடசந்தூர் தாலுகா அய்யலூர் பேரூராட்சி மலை கிராம பகுதியாக உள்ளது சுக்காவளி கிராமம். மலைப்பகுதியில் உள்ள அதே கிராமத்தில் உள்ள ஒரு சாமியார் நான் மந்திரவாதி என்றும் பில்லியை சூனியம் ஏவல் வைப்பேன் என்றும் என்னை யாரும் பகைத்தால் அவர்களை காலி செய்து விடுவேன் என்றும் மிரட்டுவதாக கூறப்படுகிறது. மேலும் ஒரு பெண் இயற்கை உபாதைகளை கழிக்க சென்ற பொழுது மறைந்து நின்று வீடியோ எடுத்து அந்த வீடியோவை அந்தப் பெண்ணிடமே காட்டி அவரை தனது ஆசைக்கு இணங்குமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்தப் பெண் திண்டுக்கல் மாவட்ட எஸ் பி யிடம் புகார் அளித்துள்ளார்.