திண்டுக்கல் கிழக்கு: அறிஞர் அண்ணா 117 வது பிறந்தநாளை முன்னிட்டு
மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த நாளை முன்னிட்டு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் ஆண் பெண் என இரு பாலரும் கலந்து கொண்டனர். பெண்களுக்கு 17 வயதும், ஆண்களுக்கு 25 வயதுக்கு மேற்பட்டோர் இந்த மாரத்தான் போட்டியில் கலந்து பங்கேற்றனர். போட்டியானது கோட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கி ஆண்களுக்கு ஏழு கிலோமீட்டர் பெண்களுக்கு 5 கிலோமீட்டர் தூரம் நிர்ணயிக்கப்பட்டு திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் முடிவுற்றது