காளையார்கோவில்: காளையார்கோவிலில் “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம்:அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு
காளையார்கோவிலில் “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தலைமையில், அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு செய்து பேசுகையில் இன்றைய முகாமில் ரூ.3,000 மதிப்புள்ள பரிசோதனைகளும்,உலகத் தர மருத்துவ சேவைகள்,அரசு மருத்துவமனைகளில் கிடைக்கின்றன.மேலும் 20 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள்,6 பேருக்கு சஞ்சீவி பெட்டகங்கள்,32 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள்,10 பேருக்கு மடக்கு சக்கர நாற்காலிகள் அமைச்சர் வழங்கினார்