கோவை தெற்கு: புளியகுளம் அந்தோணியார் ஆலயத்தில் தேர்த்திருவிழா
நேற்று மாலை திருப்பலியை தொடர்ந்து தேவாலயத்தில் தேர்த்திருவிழா நடந்தது. இதனை பேராயர்கள் ரோலிங்டன், ஜோ டேனியல், அந்தோணி ராஜ் ஆகியோர் துவங்கி வைத்தனர். இதில் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இந்த தேர் விழா புளியகுளம் பகுதியை சுற்றி வந்து ஆலயத்தில் நிறைவடைந்தது