திண்டுக்கல் கிழக்கு: 72 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா தாடிக்கொம்பு ரோடு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது
திண்டுக்கல்லில் 72 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா தாடிக்கொம்பு ரோடு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். விழாவில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் துணை மேயர் ராஜப்பா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்