ஆவடி: பாடிகுப்பத்தில் கார் மீது ராட்சத மரம் முறிந்து விழுந்தது கார் சேதமடைந்தது
சென்னை அடுத்த முகப்பேரில் இருந்து பாடிகுப்பம் செல்லக்கூடிய பிரதான சாலையில் இன்வோவா சொகுசு கார் சாலை ஓரம் மரத்தடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. காரின் அருகில் நின்று கொண்டிருந்த பழமையான மரம் ஒன்று அடிப்பாகம் சேதம் அடைந்திருந்த நிலையில் அண்மையில் பெய்த மழையில் ஈரம் ஊறி திடீரென சரிந்து இன்று காலை கார் மீது விழுந்தது. மரம் வெட்டும் கருவிகளைக் கொண்டு கிளைகள் அனைத்தும் வெட்டப்பட்டு ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் ஒன்றரை மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மரம் அப்புறப்படுத்தப்பட்டது.