திண்டுக்கல் மேற்கு: வத்தலகுண்டு-ல் பார் உரிமம் பெற்று தருவதாக ரூ.1 கோடியே 60 லட்சம் மோசடி வணிகவரித்துறை ஊழியர் கைது
வத்தலக்குண்டு காந்திநகரை சேர்ந்த சந்திரன் இவர் வத்தலக்குண்டுவில் ஓட்டல் மற்றும் தங்கும் விடுதி நடத்தி வருகிறார். இந்த விடுதியில் தேனி, பழனிசெட்டிபட்டியை சேர்ந்த வணிகவரித்துறை அலுவலர் முத்துப்பாண்டி தங்குவது வழக்கம். விடுதியில் குளிர்சாதன வசதியுடன் கூடிய பார் தொடங்கினால் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று கூறி பார் உரிமம் பெற்றுத் தருவயதாக முதல் தவணையாக ரூ.10 லட்சத்தை கொடுத்துள்ளார். பின்னர் சில நாட்கள் கழித்து வங்கி கணக்குகள் மூலமாகவும் சந்திரன் மொத்தம் ரூ.1 கோடியே 60 லட்சம் கொடுத்துள்ளார்.