திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே எஸ். புதுப்பட்டி, மாமரத்துப்பட்டி, சரலாம்பட்y அயினாம்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தன்னை சமூக ஆர்வலர் என கூறிக்கொண்டு ஊரில் வீடு கட்டுபவர்களிடம் பணம் பறிக்கும், வீட்டுப் பெண்களிடம் தவறாக பேசும் நபரான நாகேந்திரன் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.