தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் கடை பகுதியில் அதிமுக பிரமுகர் அறிவுடை நம்பி பாண்டியன் காபி கடை நடத்தி வருகிறார் இந்நிலையில் அவரது கடையில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவை தற்செயலாக பார்த்த பொழுது போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகளுக்கு இடையில் அரிய வகை மான் இனமான மிளா சாலையை கடந்து செல்வது தெரியவந்தது. உடனடியாக அதை மீட்டு பணப்பகுதியில் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.