சின்னாளபட்டியில் உள்ள ஸ்ரீசெந்தூர் முருகன் அறக்கட்டளை சார்பாக ஆதரவற்றோர்கள் மற்றும் முதியோர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவது வழக்கம். இவ்வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆதரவற்ற முதியோர்களுக்கு வேஷ்டி, சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி கடைவீதி சுமங்கலி திருமண மண்டபத்தில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளர்களாக பிற்பட்டோர் நலத்துறை வட்டாட்சியர் சின்னாளபட்டி காவல் நிலைய ஆய்வாளர் மருத்துவர்கள் மற்றும் முன்னாள் காந்திகிராம பல்கலைக்கழக உட உடற்கல்வி ஆசிரியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்