வேடசந்தூர்: கீழ் மாத்தினிபட்டியில் குளத்தில் மண் அள்ளிய டிப்பர் லாரியை போலீசாரிடம் பிடித்துக் கொடுத்த கிராமமக்கள்
வேடசந்தூர் அருகே உள்ள கீழ் மாத்தினிபட்டியில் உள்ள மாத்திணி குளத்தில் ஜேசிபி எந்திரம் மூலம் லாரியில் மண் அள்ளிக் கொண்டிருந்தனர். இதனை அடுத்து அந்த கிராம மக்கள் மண் அள்ளிய வாகனங்களை பிடித்து நிறுத்தி வேடசந்தூர் போலீசார் மற்றும் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற இன்ஸ்பெக்டர் வேலாயுதம் மற்றும் வருவாய்த் துறையினர் லாரியை மீட்டு வேடசந்தூர் போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். இதுகுறித்து லாரி உரிமையாளர் முறையாக அரசின் சீட்டு வாங்கியே மண் அள்ளுகிறோம் என்று ஆதாரங்களுடன் போலீஸ் நிலையத்தில் காட்டியுள்ளார்.