தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள வாகைத்தாவூர் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வினியோகம் செய்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சி அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.