திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் இன்று முதல் (04.11.2025) வீடுவீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதனைத்தொடர்ந்து, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வருகின்ற 04.12.2025-அன்று வரை வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.