மண்மங்கலம்: கரூர் வெண்ணமலை கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் 22 , 23& 24வது பட்டமளிப்பு விழாவில் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் செல்வம் பங்கேற்றார்
கரூர் வெண்ணமலை கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் 22, 23, 24வது பட்டமளிப்பு விழா அட்லஸ் கலையரங்கில் இன்று காலை துவங்கி மதியம் வரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர் செல்வம் கலந்து கொண்டு, இளங்கலை மற்றும் முதுகலை உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்ற 1520 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.