மேட்டுப்பாளையம்: பிரதமர் மோடி பிறந்த நாளை ஒட்டி மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தை சுத்தம் செய்யும் பணியில் பாஜகவினர் ஈடுபட்டனர்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் பாஜகவினர் பிரதமர் மோடி அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக மக்களுக்கு சேவை செய்யும் விதமாக ரயில் நிலையத்தை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர் நகர பாஜக தலைவர் சரவணன் தலைமையில் ரயில் நிலையத்தில் சிதறி கிடந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் குப்பைகளை சேகரித்து சுத்தம் செய்தனர்