வேடசந்தூர்: ஆத்துமேடு பஸ் ஸ்டாப்பில் அமர்ந்திருந்தவர் குப்புற விழுந்து உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியைச் சேர்ந்தவர் முத்துராம் (வயது 60). இவருக்கு குடும்பத்தினர் யாரும் இல்லாததால் கடந்த மூன்று மாதங்களாக வேடசந்தூர் ஆத்துமேட்டில் உள்ள ஒரு பூக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கிடைக்கும் சம்பளத்தில் சாப்பிட்டு விட்டு மது அருந்திவிட்டு நாள்தோறும் இரவு பேருந்து நிறுத்த நிழற்குடையில் தங்குவது வழக்கம். இந்த நிலையில் வழக்கம்போல் பேருந்து நிழற்குடையில் அமர்ந்திருந்த பொழுது மது போதையில் தடுமாறி குப்புற கீழே விழுந்தார். இதில் மூக்கில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.