திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் அரசு போக்குவரத்து கிளை சார்பில் பேருந்து நிலையத்தில் நடந்த நிகழ்வில் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அரசு ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். கிளை மேலாளர் நாகபாரதி தலைமையில் நடந்த இந்நிகழ்வில் பங்கேற்ற ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் பணியின் போது பயணிகளின் பாதுகாப்பு கருதி எக்காரணத்தைக் கொண்டும் செல்போன் பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.