வேடசந்தூர் அருகே உள்ள தேவிநாயக்கன்பட்டியை சேர்ந்த கொத்தனார் கதிர்வேல். வேடசந்தூர் ஆத்துமேடு கரூர் ரோட்டில் தனியார் பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அதே திசையில் வந்த மோலகவுண்டனூர் கிருஷ்ணகுமார் அவரது மனைவி கலைச்செல்வி ஆகியோர் வந்த இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டது. இதில் மூன்று பேரும் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர் வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். வேடசந்தூர் சப் இன்ஸ்பெக்டர் தர்மர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.