பரமக்குடி: நமது வீட்டிற்கு வந்தவர்கள் உயிரிழக்க வேண்டும் என யாரும் நினைக்க மாட்டார்கள். கரூர் சம்பவம் குறித்து ஆர்பி உதயகுமார் பரமக்குடி பஜாரில் வைத்து பேட்டி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அதிமுக நிர்வாகி ராமநாதன் என்பவரின் புதிய ஜவுளிக்கடையை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் அதிமுக மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா, மாவட்ட செயலாளர் முனியசாமி, முன்னாள் எம்எல்ஏ சதன் பிரபாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.