திருத்தணி: தீயணைப்பு வீரர்கள் விபத்தில் சிக்கிக் கொள்பவர்களை மீட்பது குறித்து தத்துரூபமாக ஒத்திகை செய்து காண்பித்தனர்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பைபாஸ் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர் தீயில் மற்றும் விபத்தில் சிக்கிக் கொண்டால் தங்களை எப்படி தற்காத்துக் கொள்வது குறித்து தீயணைப்பு மாவட்ட அலுவலர் பாலசுப்பிரமணியம் உத்தரவின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தொழிலாளர்களுக்கு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்திக் காட்டினர்