தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டையில் ஆர்கே நகர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி 45 லட்சம் மூன்று ரேஷன் கடை இன்று திறந்து வைக்கப்பட்டது.
தண்டையார்பேட்டை கைலாசம் தெருவில் 42 வது வார்டில் 30 லட்சங்கள் செலவில் புதியதாக கட்டப்பட்டுள்ள இரண்டு ரேஷன் கடைகளை மற்றும் வ உ சி நகரில் 40 வது வார்டில் 15 லட்சம் செலவில் ஒரு ரேஷன் கடையும் இன்று ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபினேசர் திறந்து வைத்தார் இந்நிகழ்வில் மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் கவுன்சிலர் ரேணுகா, குமாரி மற்றும் பகுதி செயலாளர் லட்சுமணன் மற்றும் வட்ட செயலாளர் ரேஷன் கடை உதவி ஆணையர் உடன் இருந்தனர்.