நாகை மாவட்டம் வேதாரணியம் அடுத்த கோடிக்கரையில் மீன்பிடி சீசன் நடைபெற்று வருகிறது. வெளியூர் மீனவர்கள் கோடியக்கரையில் தங்கி மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாகப்பட்டினம் நம்பியார் நகரைச் சேர்ந்த ரகு, பிரசன்னா, முத்துவேல், அன்பரசு ஆகிய நான்கு பேர் மீன்பிடிக்க கோடிக்கரையிலிருந்து கடலுக்கு சென்று வலை விரித்த போது இரவு 2 மணி அளவில் வீசிய சூறைக் காற்றின் வேகத்தால் எஞ்சின் விசிறியில் வலை சிக்கி படகு கவிழ்ந்தது. கடலில் கவிழ்ந்த படகை பிடித்துக் கொண்டு ஐந்து மணி நேரம் நடுக்கடலில் 4 மீனவர்களு