சோளிங்கர்: எருக்கந்தொட்டி கிராமத்தில் தீயில் வீடு எரிந்து பாதிக்கப்பட்டவரிடம் நிவாரணத் தொகை வழங்கிய அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர்
ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் அடுத்த எருக்கந்தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் மேகலா இவரது வீடு நேற்று இரவு மின் கசிவு காரணமாக தீயில் எரிந்து முழுவதுமாக நாசமானது இந்த நிலையில் இது குறித்த தகவல் அறிந்த ராணிப்பேட்டை அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் S.M.சுகுமார் எருக்கந்தொட்டி கிராமத்திற்கு நேரில் சென்று தீவிபத்தில் பாதிக்கப்பட்ட மேகலாவை சந்தித்து ஆறுதல் தெரிவித்து ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் புதிய ஆடை மற்றும் நிவாரணத் தொகையினை வழங்கி ஆறுதல் தெரிவித்தார்