செம்பட்டி, ரவுண்டானா பகுதியிலிருந்து மதுரை நோக்கி அதிவேகமாக சென்ற கார் செம்பட்டி பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை பேருந்துகள் வெளியேறும் பகுதியில் சென்று, ஒரு வழிச்சாலையில் அதிவேகமாக சென்றது. எதிரே வந்த கார் மற்றும் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 இருசக்கர வாகனங்கள் மீது தொடர்ச்சியாக மோதி நிற்காமல் சாலை ஓரம் சென்ற ராமநாதபுரத்தைச் சேர்ந்த சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் அவர் சுமார் 30 அடி தூரம் கார் முன்பகுதியில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டார்