வேடசந்தூர்: காக்காதோப்பு பிரிவில் அரசு பஸ் டயர் கழண்டு சென்றதால் பரபரப்பு
திண்டுக்கல்லில் இருந்து வேடசந்தூரை நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ்ஸை டிரைவர் முருகன் ஓட்டி வந்தார். நடத்துனராக சிவசுப்பிரமணி என்பவர் இருந்தார். பஸ்சில் 8 பயணிகள் இருந்த நிலையில் பஸ் காக்காதோப்பு பிரிவில் வந்த பொழுது திடீரென பஸ்சின் வலதுபுரம் பின்பக்க டயர்கள் இரண்டும் கழண்டது. இதில் பஸ் நீண்ட தூரம் இழுத்துச் செல்லப்பட்டது. இதில் ஒரு டயர் பஸ்சை முந்திக்கொண்டு வேகமாக சென்று பள்ளத்தில் விழுந்தது. மற்றொரு டயர் பஸ்சின் பின்பக்கமாக வேகமாக ஓடி குழியில் விழுந்தது. டிரைவரின் சாமார்த்தியத்தால் பஸ் கவிழாமல் ஓரமாக சென்று நிறுத்தப்பட்டது.