நாடார் மகாஜன சங்கம் உள்பட பல்வேறு நாடார் அமைப்புகளின் நிர்வாகிகள், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் முதல்-அமைச்சராக 9 ஆண்டுகள் பணியாற்றி, தமிழக மக்களுக்கு பொற்கால ஆட்சியை தந்தார். இந்த நிலையில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அரை நூற்றாண்டுக்கு பின்னர் பெருந்தலைவர் காமராஜரை பற்றியும், நாடார் சமுதாயத்தை பற்றியும் அவதூறாக யூடியூப்பில் ஒருவர் வீடியோ வெளியிட்டு உள்ளார்.