பெரம்பூர்: வியாசர்பாடி முல்லை நகர் பகுதியில் ரவுடி நாகேந்திரன் பிரேதம் கொண்டு வருவதால் அவரது தாயார் வீட்டின் அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வியாசர்பாடி முல்லை நகர் பகுதியில் பிரபல வடசென்னை தாதா நாகேந்திரன் மரணம் அடைந்ததை அடுத்து அவருடைய உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவருடைய தாய் வீட்டிற்கு வர இருப்பதால் அங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த பாதுகாப்பு பணிகளை ஆணையாளர் கல்யாண் ஆய்வு மேற்கொண்டார்