எட்டயபுரம்: கழுகாசலபுரம் விளக்கு பகுதியில் ஆட்டுமந்தைக்குள் அரசு பேருந்து புகுந்து 7 செம்மறி ஆடுகள் பலி
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லக்கம்பட்டி பகுதியைச் சார்ந்த விவசாயி கார்மேகம் செம்மறி ஆடுகள் மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார் இந்நிலையில் கோவில்பட்டியில் இருந்து விளாத்திகுளம் நோக்கிச் சென்ற அரசு பேருந்து கழுகாசலபுரம் பகுதியில் ஆட்டு மந்தைக்குள் புகுந்தது இதில் செம்மறி ஆடுகள் 7 ஆடுகள் பலியாகியது. இந்த விபத்து தொடர்பாக எட்டையாபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.