வேடசந்தூர்: மேல்மாத்தினிபட்டியில் சாக்கடை அமைக்காததால் கழிவுநீர் வீட்டுக்குள் புகுவதாக மக்கள் குற்றச்சாட்டு
வேடசந்தூர் அருகே உள்ள மேல்மாத்தினிபட்டியில் புதிய தார் சாலை அமைக்க எம்எல்ஏ காந்திராஜன் தலைமையில் பூமி பூஜை போடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதே ஊரை சேர்ந்த 70 ஆண்டுகளாக வசித்து வரும் மக்கள் ஆரம்பத்தில் உயரமாக இருந்த எங்கள் குடியிருப்பு பகுதி சாலை அமைக்க அமைக்க பள்ளத்தில் சென்றதால் மழை பெய்யும் பொழுது மழை நீருடன் மலம் கலந்த சாக்கடை நீரும் கலந்து வீட்டுக்குள் புகுந்து விடுகிறது இதனால் முறையாக சாக்கடை அமைத்து தண்ணீர் தேங்காமல் செல்ல நடவடிக்கை எடுத்து புதிய தார்சாலை அமைக்க கோரிக்கை.