திருவள்ளூர்: தவெக தலைவர் விஜய் சுற்று பயணத்திற்காக அனுமதி வழங்ககோரி எஸ்பி அலுவலகத்தில் தவெகவினர் மனு அளித்தனர்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த 13ஆம் தேதி திருச்சி மாவட்டத்திலிருந்து தன்னுடைய அரசியல் பயணத்தின் முதல் பரப்புரையைத் தொடங்கினார். மூன்றாவது கட்ட சுற்றுப்பயணமாக வரும் 27-ஆம் திருவள்ளூர் மாவட்டத்தில் அவரது சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ள நிலையில் பரப்புரைக்கு அனுமதி வேண்டி தவெக கட்சியினர் திருவள்ளூர் எஸ் பி சந்தித்து மனு அளித்தனர்,