கல்குளம்: லட்சுமிபுரத்தில் இருசக்கர வாகன மோதி சிகிச்சையில் இருந்த மீன்பிடி தொழிலாளி உயிரிழப்பு
மிடாலம் பகுதியை சேர்ந்தவர் ஜான் போஸ்கோ சம்பவ தினத்தன்று தனது மகளை பார்க்க லட்சுமிபுரத்திற்கு சென்றார் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது ஆண்டனி என்பவர் ஓட்டி வந்த பைக் ஜான் போஸ்கோ மீது மோதியது இதில் படுகாயம் அடைந்து ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று இரவு உயிரிழந்தார் இது குறித்த புகாரில் போலீசார் இன்று வழக்கு பதிவு செய்தனர்