திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா மணலூர் ஊராட்சி புல்லாவெளி அருவியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். புல்லாவெளி அருவியை மேம்படுத்தும் வகையில் சுற்றுலாத்துறை சார்பாக ரூ.2 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா அடிப்படை வசதிகளான பூங்கா, வாகன நிறுத்துமிடம், கழிப்பறை, அருவியினை கண்டு ரசிக்கும் வண்ணம் படிக்கட்டுகள் போன்ற வசதிகளினை மேற்கொள்ளும் பொருட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.