கடந்த 5ம் தேதி மத்திய பிரதேசம் போபால் நகரில் தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டிகள் நடைபெற்றது 14 வயதுக்குட்பட்ட மகளிர் பிரிவில் நடைபெற்ற போட்டியில் தமிழ் நாடு சார்பில் சின்னாளப்பட்டி சேர்ந்த ஹர்ஷா, செட்டியபட்டியைச் சேர்ந்த தனுஸ்ரீ மற்றும் மதுரையைச் சேர்ந்த துவாரகா ஆகிய மூன்று பேர் பங்கேற்று சிறப்பாக விளையாடி இரண்டாம் இடம் பிடித்தனர் மாணவிகள் மூன்று பேருக்கும் வெள்ளி பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஹர்ஷா மற்றும் தனுஸ்ரீ இரண்டு பேரையும் உறவினர்கள் வரவேற்று சால்வை அணிவித்து பாராட்டினர்