தூத்துக்குடி: மொட்டை கோபுரம் கடற்கரை சாலையில் ஆயுதங்களுடன் பொதுமக்களை மிரட்டி வழிப்பறி 3 வாலிபர்கள் கைது
தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் சரக பகுதியில் வாலிபர்கள் சிலர் கும்பலாக நின்று கொண்டு வழிப்பறியில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தாழம்பூத் நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துராஜா தலைமையிலான போலீசார் முக்கிய இடங்களில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.