கொடைக்கானல்: கொடைக்கானல் அஞ்சு வீடு அருவி மறு அறிவிப்பு வரும் வரை தடை செய்யபட்ட பகுதியாக அறிவிப்பு
கொடைக்கானலில் உள்ளது அஞ்சு வீடு அருவி இந்த அருவியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சியைச் சேர்ந்த மருத்துவ மாணவர் நண்பர்களுடன் குளிக்க சென்ற போது அருவியில் மூழ்கி பலியானார் 4 நாட்களுக்குப் பிறகு பிணமாக மீட்கப்பட்ட நிலையில் தற்போது வரை இந்த அருவியில் 11க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது இதை அடுத்து கொடைக்கானலை சுற்றியுள்ள சுற்றுலா துறையால் அங்கீகரிக்கபடாத அருவிகள் எல்லாமே தடை செய்யபட்ட பகுதிகளாக அறிவிக்கபடுகிறது என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவு