திண்டுக்கல் கிழக்கு: மாநகராட்சி அருகே தீபாவளி பண்டிகை முன்னிட்டு குவிந்த பொது மக்கள் - போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் டிஎஸ்பி
தீபாவளி புத்தாடை மற்றும் தங்க நகைகள் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருவதால் திண்டுக்கல் பேருந்து நிலைய் சாலை, பெரிய கடை வீதி, மணிக்குண்டு, கச்சேரி தெரு, சத்திரம், கிழக்கு - மேற்கு ரத வீதிகள், பழனி சாலை உள்ளிட்ட கடை வீதி பகுதிகளில் அமைந்துள்ள துணிக்கடை மற்றும் நகை கடைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. மேலும் திண்டுக்கல் பிரதான சாலையான நாகல்நகர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.