மாதவரம்: புழல் சீனிவாசன் தெருவில் தனியாருக்கு சொந்தமான ஆட்டு சந்தையை திறக்க கூடாது என்று பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு
புழல் தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் தெருவில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் ஆட்டு சந்தை திறக்கப்பட்டதற்கு பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் அரசியல் கட்சி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்த முற்றுகையிட்டனர். பொதுமக்கள் அனைவரும் அங்கு ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து அங்கு வந்த புழல் காவல்துறையினர் அனைவரிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை அடுத்து சந்தையின் உரிமையாளர் ஒருவாரத்திற்குள் காலி செய்கிறேன் என ஒப்புக்கொண்டவை அடுத்து அப்பகுதி மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.