பட்டுக்கோட்டை: காத்திருக்கும் கால்நடைகளின் அவதியை போக்குவீங்களா : ஏனாதி கால்நடை மருத்துவமனையை உரிய நேரத்தில் திறப்பீங்களா?
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ஏனாதி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பகுதிநேர கால்நடையை உரிய நேரத்தில் வந்து திறக்காமல் இருப்பதால் கால்நடைகளை அழைத்து வந்து வெகு நேரம் காத்திருக்கும் நிலை நிலவுகிறது. இதனால் கால்நடைகளின் நோயின் தன்மை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே உரிய நேரத்தில் வந்து கால்நடை மருத்துவமனை திறந்து கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.